இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படம் ‘லாபம்’. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இந்த படத்தை விஜய் சேதுபதியின் புரொடக்ஷன் மற்றும் 7சிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் தற்போது பிக்பாஸ் புகழ் டேனி இணைந்துள்ளார்.
இவர் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் பேசிய “பிரெண்டு ஃபீல் ஆய்டாப்புல” என்ற வசனம் மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.