சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரில் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது .வரும் 15-ம் தேதி அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோபோ ரோவர் ஏவப்படுகிறது.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இஸ்ரோவின் இந்த திட்டத்தை, ஏவப்படும் போது நேரில் பார்வையிட வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கடந்த மாதம் 21-ம் தேதி இஸ்ரோ தலைவர் சிவன் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் வரும் 15 ஆம் தேதி ஏவுதலைக் காண வருகை தரவுள்ளார்.இவர் ராக்கெட் ஏவுதலைக் காணும் 3-வது குடியரசுத் தலைவர் ஆவார். ஏற்கெனவே, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாம் 2005-ம் ஆண்டு கார்டோசாட் 1 செயற்கைக் கோள் ஏவுதலையும், 2013-ம் ஆண்டு பிரணாப் முகர்ஜியும் செயற்கைக் கோள் ஏவுதலையும் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏவுதலை பொதுமக்கள் நேரில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .