இயக்குனர் எல்.சுரேஷ் இயக்கத்தில், ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா உள்ளிட்ட பல இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘நீயா 2’.
பாம்பின் பழிவாங்கலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தை திரையிடும் தேதியை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘நீயா 2’ திரைப்படம் வரும் மே மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ்க்காக சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.