Mnadu News

அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் திரையிடும் தேதி மாற்றம்

இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கே 13’. த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் வருகிற மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் திரையிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது. ‘கே 13’ வரும் மே 1ம் தேதிக்கு பதிலாக மே 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை இன்று வெளியாகிறது.

Share this post with your friends