Mnadu News

கேரளாவில் வாக்களிக்க வந்த பாம்பு மக்கள் பீதி

கேரளாவின் கண்ணூர் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் பி.கே. ஸ்ரீமதி, காங்கிரஸ் கூட்டணி சார்பில் கே. சுரேந்திரன், பாஜக சார்பில் கே. பத்மநாபன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை முதலே மக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நாடடைபெற்று வரும் இந்த வாக்கு பதிவில் . முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் இன்று ஓரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் கேரளாவில் உள்ள பொதுமக்களும் சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் .

கேரளாவின் கண்ணூர் தொகுதியில் உள்ள கண்டகை நகரில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர் .இந்நிலையில் வாக்களிக்கும் சமயத்தில் அந்த இயந்திரத்தில் சத்தம் வந்தது . அதன் பின் அந்த இயந்திரம் ஆட தொடங்கியது . என்னவென்று தெரியாமல் இருந்தபோது அந்த இயந்திரத்தில் பாம்பு இருந்தது தெரிய வந்தது .

இதனால் வாக்களிக்க வரிசையில் இருந்த மக்களும், தேர்தல் அறையில் இருந்த அதிகாரிகளும் அலறியடித்து வெளியே ஓடினர். அதன்பின் போலீஸார், மற்றும் அதிகாரிகள் வந்து ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தில் இருந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.அதன்பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

Share this post with your friends