Mnadu News

விஜய்சேதுபதியின் படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகன்

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘மாமனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் கவுதமனின் மகன் தமிழ் அழகன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருப்பதாக இயக்குனர் சீனுராமசாமி கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends