கிருஷ்ணகிரி அருகே உள்ள தென்னந்தோப்பில், 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்த நிலையில், அருகில் இருந்த ஒரு நபர் தன்னைத்தானே, கூர்மையான தென்னை மட்டையால், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், அந்த நபரைப்பிடித்து விசாரணை செய்ததில், அவர் பெயர் கார்த்திக் என்றும், கொலை செய்யப்பட்ட பெண், அவரது தாய் வைரம்மாள் என்றும் கூறியுள்ளார்.
சேலம் மணியனூரில், ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடை வைத்துள்ளதாகவும் அவர் மீது தாய் வீண் புகார் கூறியதால் வாடகை காரில் அழைத்து வந்து, தலையில் கல்லை போட்டு கொன்றதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர் .
இந்நிலையில் கொலைக்கான கரணம் இது தானா அல்ல வேறு ஏதும் காரணம் இருக்கக்கூடுமா என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன .