Mnadu News

தமிழ் புத்தாண்டில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் காப்பான் -கே.வி.ஆனந்த்

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா நடித்து விரைவில் வெளி வர இருக்கும் திரைப்படம் என்.ஜி.கே .இந்த படம் மே மாதம் 31 ஆம் தேதி வெளிவர இருக்கிறது .

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் அடுத்த படம் காப்பான் .இந்த படத்தை பிரபல இயக்குனரான கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். காப்பான் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது .இந்த படத்தின் இயக்குனரான கே.வி.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இந்த மாதம் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு விருந்து நிச்சயம்” என்ற பதிவை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் முதலாவது பாடல் அல்லது டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends