சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை செளந்தரராஜன் அறிவிக்கபட்டிருந்தார் தேர்தலுக்காக அவர் தூத்துக்குடியில் தங்கவேண்டி இருந்தது .
தேத்தல் முடியும் வரை தமிழிசை செளந்தரராஜன் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினார் அந்த வீட்டில் நீண்டகாலமாக வாட்ச்மேனகா பணிபுரிந்து வருபவர் பச்சைப்பெருமாள் மற்றும் அந்த வீட்டின் மற்ற பணிகளை பார்த்து வருபவர் பச்சைப்பெருமாளின் மனைவி வள்ளியம்மாள்.
இவர்களுக்கு ராம்பிரியா, இந்துப்பிரியா, கவிதா என .3 குழந்தைகள் உள்ளனர் .தமிழிசை செளந்தரராஜன் அந்த 3 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருப்பார் என்று வள்ளியம்மாள் கூறிருந்தார் அது மட்டும் இல்லாமல் அவர் கட்சி பணி முடிந்து வீட்டை காலி செய்யும்போது வள்ளியம்மாள் அவர்களின் கடைசி மகளான கவிதாவுக்கு பள்ளிக்கு சென்று வருவதற்காக ஒரு புதிய சைக்கிளை பரிசாக தமிழிசை செளந்தரராஜன் கொடுத்துள்ளார் .
மேலும் தமிழசை செளந்தரராஜன் ரொம்ப நல்லவர் என்றும் எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை கேளுங்கள் என்றும் சொன்னதாக வள்ளியம்மாள் கூறியுள்ளார் .