கமல் கிரேஸி மோகன் மிக நெருங்கிய நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரிந்தது .மேலும் இவர்கள் இருவரும் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே இருத்தது .அப்படிப்பட்ட தனது நெருங்கிய நண்பர் மறைந்த செய்தியை கேட்டதும் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்து சோகத்துடன் சென்றடைந்தார் கமல்ஹாசன்.இந்நிலையில் அவர் கிரேஸி மோகன் மற்றும் அவருக்கு இடையே உள்ள நட்பின் ஆழத்தை பற்றியும் உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் .மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, கிரேஸி மோகன் என்ற பட்டம் அவருக்கு பொருந்தாத பட்டம் ,நகைச்சுவை ஞானி என்று தான் அழைக்க வேண்டும் என கூறினார் .