நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில் நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார் . மேலும் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிவுற்ற நிலையில் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து தனது வெற்றி குறித்து கூறினார் .
அப்போது அவர் கூறுகையில் மத்திய அமைச்சராகும் கனவு தனக்கு கிடையாது என்று தேனி மக்களவை தொகுதியில் வெற்றி அதிமுக வேட்பளார் ரவீந்திரநாத் தெரிவித்தார்.மேலும் அவர் இதுகுறித்து அவர்கூறுகையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் சரி செய்ய பாடுபடுவேன் என்றார்.