ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக பாலிவுட் நடிகர் பிரதிக்பாபர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘பாகி 2’ திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ‘தர்பார்’ படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரதிக்பாபர், வில்லனின் மகனாக நடிக்கவுள்ளார்.