கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான காட்டு தீபற்றி எரிந்து வருகிறது. இதுவரை திட்டத்தட்ட 97000 ஹெக்டேர் பரப்பளவில் இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
சுமார் 300 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக கட்சி அளிப்பதால் தீயை அணைக்க வீரர்கள் சற்று சிரமப்பட்டு வருகின்றனர் .
சற்றும் ஓயாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த காட்டு தீ மேலும் பரவ வாய்ப்புள்ளதால் அந்த பகுதியை சுற்றி வாழும் 5000 துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு வேறு பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் .