இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி உலகக்கோப்பைக்கான போட்டிகள் தொடங்க இருக்கிறது . இந்நிலையில் 15 பேர்கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியலை நேற்று பிசிசிஐ மும்பையில் வெளியிட்டது .இந்திய உலகக்கோப்பை அணியில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள்.
தினேஷ் கார்த்திக் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தேர்வாகியுள்ளார் .மற்றும் நடுவரிசை வீரராக ஆல்ரவுண்டர் நிலையில் இருக்கும் விஜய்சங்கர் தேர்வாகியுள்ளார் .
இந்நிலையில் இங்கிலாந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் உள்ளதால் அவர்களை சமாளிக்க இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நமது இந்தியா அணி சார்பில் பயிற்சி அளிக்க 4 இளம் வேகப்பந்து வீச்சாளர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளார்கள்
இதற்கான வீரர்கள் பெயரையும் வெளியிட்டுள்ளனர் .வேகப்பந்துவீச்சாளர்கள் கலீல் அகமது, ஆவேஷ் கான், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோர் இங்கிலாந்து சென்று இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாகத் தயாராக வலைபயிற்சியில் பந்துவீசி பயிற்சி அளிப்பார்கள் என்று பிசிசிஐ முடிவுசெய்துள்ளது .