தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நேற்றைய தினம் நடைபெற்றது . குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனையின் போது முடிவெடுத்தார் .கேரளாவில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதை குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது .இந்நிலையில்,ஜோலார்பேட்டையில் தண்ணீர் போதுமான அளவிற்கு உள்ளது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.மேலும் வேலூர் ,ஆம்பூர் ,வாணியம்பாடி மக்களுக்கு எவ்வித தண்ணீர் பிரச்சனையும் ஏற்படாத வகையிலையே ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More