அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் எனவும் ,மேலும் ஒன்றிரண்டு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதாவது ,தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒன்று இரண்டு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் பொறுத்தவரை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 39டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.