Mnadu News

இந்த விதிகள் தமிழ் படத்திற்கு ஏன் இல்லை – நடிகர் விஷால் கேள்வி

ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ இன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் “படத்தின் முக்கிய காட்சிகளை மொபைலில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை தவிர்க்கவும். அனைவரும் தங்கள் அலைபேசியை அணைத்து விட்டு படத்தை ரசிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் விஷால் “இது நல்ல விஷயம் தான். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை வரும் ஆங்கில படத்திற்கு செய்வது போல் அடிக்கடி வெளியாகும் தமிழ் படத்திற்கும் இதேபோல் செய்யலாமே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this post with your friends