உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இவர் நடிகர் அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் பொழுதுபோக்கு இணையதளத்திற்கு அக்ஷரா ஹாசன் அளித்துள்ள பேட்டியில் “விவேகம் படத்தில் எனக்கு குறைவான காட்சிகளே இருந்தது. இருந்தாலும் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது.
தற்போது ‘கடாரம் கொண்டான்’ படத்தில் அதிக காட்சிகளில் நடித்து உள்ளேன். அஜித்தின் மனிதத்துவம், செய்கைகள் அனைத்தும் ஈர்க்க வைக்கும். மிகவும் கனிவானவர். அஜித்தின் மன உறுதி, தன்னம்பிக்கை மிகவும் ஊக்கம் தரும் வகையில் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.