நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தராஜன் அந்த தொகுதியில் வெற்றிபெறவிட்டாலும் என்றும் நான் தூத்துக்குடி மக்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் பாஜக எப்போதும் தமிழகத்தின் மீது அக்கறையுடன் தான் இருக்கும் எனவும் ,மேலும் பல்வேறான திட்டங்கள் தமிழகத்திற்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.மேலும் தமிழகத்திற்கு ஏற்ற திட்டங்கள் இல்லையென்றால் அது மறுபரிசீலக்கப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.