Mnadu News

அசுரன் படத்தின் ருசிகர தகவல்

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களான மாரி-2 ,வடசென்னை ஆகிய படங்கள் வெளியாகியது . இதில் வடசென்னை படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. வடசென்னை படத்தில் தனுஷின் தத்ருபமான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .

வடசென்னை போன்றே வெற்றி கொடுத்த படம் என்றால் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவான ‘ஆடுகளம். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே ஒரு வெற்றி கூட்டணி என்று சிலர் சொல்வதுமுண்டு .

அந்த வகையில் இவர்கள் இருவரது கூட்டணியில் தற்போது ‘அசுரன்’ என்ற படம் வெளிவர இருக்கிறது . படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்க்கு 71 ஆவது படமாக ‘அசுரன்’ படம் வெளிவர இருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளது .

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களான மஞ்சுவாரியர், பசுபதி , பாலாஜி சக்திவேல் பவன், கேன்கருனஸ், சுப்பிரமணியம் சிவா போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

https://twitter.com/TN_Theatres/status/1111094353433223168

அதோடு மட்டுமல்லாமல் இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம் . தந்தை, மகன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

https://twitter.com/dhanush_chow3/status/1111104518723297280

தற்போது ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் ட்ரெண்டிங்கில் வளம் வருகிறது .

Share this post with your friends