Mnadu News

tiktok நிறுவனம் மீது தவறா…! user மீது தவறா …

தற்போது  உள்ள காலகட்டத்தில்  சமூக  வலைத்தளம்     அடிமையாகி விட்டோம்  என்று சொல்லும்  அளவிற்கு   சமூக  வலைத்தளம் ஒன்றும் நம்மை  அடிமைப்படுத்தவில்லை .நாம்  தான் சமூக  வலைத்தளத்திற்கு அடிமையாகிவிட்டோம்   என்பது  தான் உண்மை.

ஆரம்ப   காலகட்டத்தில்  தொழில்நுட்பம்  வளரவளர பொழுதுபோக்கு  அம்சம் மற்றும்  தகவல் பரிமாற்றத்திருக்காகவும்  app உருவாக்கப்பட்டன .உதாரணமாக   facebook ,whats app ,twitter instagram ,youtube,tiktok  போன்றவை  ஆரம்ப காலகட்டத்தில்   வெறும் பொழுதுபோக்கிருக்காக  உருவாக்கப்பட்டன .ஆனால்  இதை  பயன்படுத்துவதனால் நாம்  அடிமையாகுவதோடு  மட்டுமல்லாமல்  ,கலாச்சாரத்திற்கு   இழுக்கு என்று  கூறிவருகின்றனர் .

அந்த  வகையில் கடந்த சிலவருடங்களாக  நாம் அதிகஅளவில் பயன்படுத்தும் app  வரிசைகளில் முக்கியமானவைகளில்  ஒன்றாக   tiktok  செயலியும் அதில் அடங்கும் .

 

Image result for social media icons

tiktok  உருவான  கதை  ;

tiktok  செயலியை  முதன்முதலில் 2016 ல்   அறிமுகப்படுத்தியது  சீன.தங்கள் எடுக்கும் விடியோக்கள் அதாவது bytedance  என்று சொல்லப்படும்  விடியோக்களை ஷேர் செய்யலாம்  என்ற  அமைப்பில்   சீன நாடு  உருவாக்கப்பட்டது.  ஆனால்  இந்த tiktok   செயலி ஒருவருடத்திற்கு  முன்  சந்தைக்கு   வந்தது .அதன் பின்னர் 2018 ல்  கிட்டத்தட்ட 150 சந்தைகளில்  75  மொழிகளில்  வெளியிடப்பட்ட   tiktok   செயலி ஆசியா,அமெரிக்கா  போன்ற   பல  நாடுகளில்  விற்கப்பட்டது  .

Related image

இந்த   tiktok   செயலியை  உலகளவில்  சுமார்  500  மில்லியன்  மக்கள்  பதிவிறக்கம்  செய்துள்ளனர்.tiktok  செயலி  2018   ஆம்  ஆண்டு   இருந்த  musical.ly  app  உடன்  கைகோர்த்து என்பது குறிப்பிடத்தக்கது .இந்த   tiktok  செயலி சந்தைகளில்  வெளியான  பிறகு இதுவரை  facebook ,whats app twitter ,instagram  போன்றவற்றை  பதிவிறக்கம் செய்வதைக்காட்டிலும்  அதிகஅளவு  பதிவிறக்கம் செய்யப்பட்டது.

 

tiktok  செயலியின் விதிமுறைகள்

tiktok  செயலியை   பதிவிறக்கம்  செய்தவுடன்  பயனாளருடைய  மின்னஞ்சல் முகவரி  பதிவு  செய்யவும் .  மின்னஞ்சல்  முகவரியை   ஏற்று கொண்டபின்னர் ,பயனாளர்  எடுக்கும்  விடியோக்கள் பாடலுடன் சேர்த்து3-15  நிமிடம்  வரை  தான்  இருக்க  வேண்டும் .மேலும் பயனாளர்  தங்களுடைய  வீடியோக்களை  பாதுகாப்பாக   வைத்து  கொள்ள  privacy ,block  போன்ற பல  வசதிகள்   உள்ளன .

Image result for tiktok privacy

 

கலாச்சாரத்திற்கு  இழுக்கு ?

இவ்வளவு அதிகமான   வசதிகளும் ,பாதுகாப்பான  விதிமுறைகள்   இருந்தும்  tiktok  சமூகத்திற்கு கலாச்சாரத்திற்கும்  இழுக்கு  என அதை  பலபேர்   தடை செய்யக்கோரி போராடி  வருகின்றனர் .

Related image

பொழுதுபோக்கு   அம்சத்திருக்காக  மட்டும்  உருவாக்கப்பட்ட  tiktok  செயலியை   குறை  கூறுவதா ? இந்த செயலியை  பயன்படுத்தும்  பயனாளர்களை  குறை கூறுவதா.சிலர்  தங்களுக்கு  கிடைக்கும் like  போன்றவைகளுக்கு   அடிமையாகி  அரைகுறை  ஆடைகளில்   வீடியோ  எடுப்பதும் , ஆபாசமாக வீடியோக்களை  எடுப்பதை பகிருவதாலேயே  ஏற்படும்  விளைவு ஏராளம்  .இந்த tiktok  செயலியை   தடை  செய்ய முக்கிய காரணங்களில் ஒன்றாக  இதை  சொல்லலாம் .

tiktok  அடிமைகள் 

சமீபத்தில்  எடுத்த  ஆராய்ச்சியில்  tiktok செய்வதில் சிலர்  அடிமையாகி 90  நிமிடத்திற்கு  ஒரு முறை   அவர்கள்   வீடியோ பதிவிடுகிறார்கள் என  அதிர்ச்சியூட்டும்  ரிப்போர்ட்  தந்துள்ளனர்.

ஆனால்  இந்த கலாச்சார  சீர்கேட்டிற்கு  tiktok  app   மட்டும்  முழுக்காரணம்   என்று சொல்லமுடியாது.tiktok செயலியை  பயன்படுவதினால்   அவர்களுடைய  நடிப்பு  திறமையறிந்து  பலருக்கு  இதன்மூலம்  நல்ல   எதிர்காலம்  கிடைத்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for tiktok videos

நடிகர்,நடிகைகள்  கூட   ஆர்வத்தோடு  tiktok  செயலியில்   ஆர்வத்தோடு  விடியோக்கள்  எடுக்கின்றனர் .இப்படி செல்லுகையில்   tiktok செயலியை தவறாக  சில நபர்கள்   பயன்படுத்துவதனாலே  பிரச்சனைகள்   ஏற்படுகின்றன .

இதுகுறித்து     tiktok   நிர்வாகம்    ஒரு அறிக்கையை  வெளியிட்டது   அதில்   , மக்கள் நலன் கருதி   மோசமான  வீடியோக்களுக்கு ஒரு போதும்  நாங்கள் துணை  நிற்கமாட்டோம் . மேலும்  மோசமான  வீடியோக்களை   எங்கள்  பதிவிலிருந்தே  நீக்கிவிடுவோம்   என்றும் அவர்கள்  கூறினார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for tiktok ban

மேலும்   வெறும்  பொழுதுபோக்கு  அம்சத்திருக்காக  உருவாக்கப்பட்ட  tiktok  தளத்தை   தடை செய்ய கூறி   உச்ச நீதிமன்றத்தில்   வழக்கு  தொடுத்து  வந்தாலும்  அதில்  என்ன பயன்!…இந்த  tiktok app   தடை செய்தால்  மட்டும்  இதற்கு  தீர்வாக  அமையாது  . இந்த app இல்லையென்றால்   வேறொரு app  அடுத்த இடத்தில  வரும். தொழிநுட்பத்தை   குறைகூறாமல்  தவறாக   பயன்படுத்தாமல்   இருப்பதே  தீர்வாக  அமையும்.

மனிதனால்   உருவாக்கப்பட்ட  இந்த  apps  தவறாக  பயன்படுத்தும்  சில மனிதர்களாலே  அழிவை  நோக்கி செல்கின்றன  என்பதே  வேதனையளிக்கிறது .

 

 

Share this post with your friends