Mnadu News

தீ விபத்துக்கு உள்ளான பாரிஸின் டாம் தேவாலயம்

பாரிஸ் நகரின் முக்கியமான பாரம்பரிய இடங்களில் ஒன்ரார்க இருப்பது இந்த 850 ஆண்டுகள் பழைமையான டாம் தேவாலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாட்ரே-டாம் தேவாலயம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இருந்து வருகிறது .

உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்துவ மக்கள் ஆண்டு தோறும் இந்த தேவாலயத்துக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கமாக வைத்துள்ளார்கள் .1800களில் பிரான்ஸ் பேரரசரர் நெப்போலியன் போனாபர்டே இந்த தேவாலயத்தில்தான் மூடிசூட்டிக்கொண்டார் என்று வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

திடிரென்று நேற்று இந்த தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு தீ மலமலமென பரவியது.400 தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரத்துக்குள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் இந்த புகழ் பெற்ற தேவாலயம் சேதமடையாமல் முடிந்த வரை பாதுகாத்தனர் .

தேவாலயத்தின் சேதமடைந்த பகுதிகளை விரைவில் சீரமைக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது .

Share this post with your friends