ஸ்வீடன் நாட்டில் உமியா என்ற இடத்தில் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனல் பாராசூட் மூலம் அதில் இருந்த வீரர்கள் குதிக்க முயற்சித்தனர்.
இருப்பினும் குதிக்க முயல்வதற்குள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 9 வீரர்களும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கும் காட்சியை சிலர் மொபைலில் படம் பிடித்து அந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது .