மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்திற்காக சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் அதிபர்கள் அழைப்பின் பேரில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்காள்வதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், அதிகாரிகள் வழிஅனுப்பி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தொழில் அதிபர்கள் அழைப்பின் பேரில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்காள்வதாக தெரிவித்தார்.
தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை ஸ்டாலின் கொச்சைப் படுத்தி பேசுவதாக சாடிய முதலமைச்சர், தான் ஒன்றும் தொழில் அதிபர் அல்ல என்றும் சாதாரண விவசாயி என்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே வெளிநாடு சுற்றுப்பயணம் என்றும் விளக்கம் அளித்தார்.