Mnadu News

வாக்குப் பதிவு நடக்கும் இடத்தில் திரினாமூல் காங். மற்றும் பா.ஜ.க., மார்க்சிஸ்ட் அடிதடி மோதல்

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் ஒரு வாக்குப் பதிவு மையத்தில் திரினாமூல் காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையேயான அடிதடி மோதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர்.

அசன் சோலுக்குட்பட்ட சில வாக்குச் சாவடிகளில் மத்திய பாதுகாப்புபடையினர் இல்லை என திரினாமூல் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சினை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. வாக்களிக்க வந்த வாக்காளர்களை அவர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அங்கு அடிதடி மோதல் ஏற்பட்டது. பலர் நீண்ட கம்புகளை எடுத்துக்கொண்டு அடிதடியில் இறங்கினர்.

அவர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காததையடுத்து அவர்கள் அடிதடியடியில் ஈடுபட்டனர்.கலவரத்தில் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவின் கார் அடித்து நொறுக்கப்பட்டன.வாக்குச் சாவடி அலுவலர்களுடன் பாபுல் சுப்ரியோ வாக்குவாதத்தில் ஈடுபடும் கட்சிகளும் வெளியாகியுள்ளன.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More