Mnadu News

சித்தார்த்துடன் மீண்டும் இணையும் த்ரிஷா

தமிழ்த்திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் சித்தார்த்தும், திரிஷாவும் ஆயுத எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது, இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்து நல்ல வசூல் செய்தது. இந்த நிலையில், அந்தாதுன் படத்தை தமிழில் தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. ஆயுஷ்மேன் கதாபாத்திரத்தில் சித்தார்த், ராதிகா ஆப்தே வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Share this post with your friends