தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளின் பட்டியலில் வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு நாளை(மே 4) பிறந்தநாள்.
இதனை முன்னிட்டு இவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘பரமபத விளையாட்டு’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதனையொட்டி ரசிகர்களுக்கு விருந்தாக ‘பரமபத விளையாட்டு’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரிச்சர்டு, நந்தா, ஏ.எல்.அழகப்பன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.