இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள். அந்த வகையில், தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் திரிஷா வருவார் என்பதில் சந்தேகமில்லை.
திரிஷா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்க்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.