இயக்குனர் திருஞானம் இயக்கத்தில், நடிகை த்ரிஷா நடித்து வரும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. இந்த படத்திற்காக சில மாறுபட்ட காலகட்டங்களின் வேடங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று த்ரிஷாவின் பிறந்தநாள் என்பதால் ‘பரமபத விளையாட்டு’ படத்தின் டிரைலரை அவருக்கு பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் நந்தா, ரிச்சர்டு, இமான் அண்ணாச்சி, சோனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் டிரைலரை வெளியுட்டுள்ளார்.