Mnadu News

எகிப்தில் 50 ஆண்டுகளுக்குப் பின் இரு பழமையான பிரமீடுகள் பார்வைக்கு

எகிப்த் நாட்டில் கெய்ரோ தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பழமையான இரு பிரமீடுகள் அமைந்துள்ளன. 1965-ம் ஆண்டுக்குப் பின் சிதைவடைந்த அந்த பிரமீடுகளில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, தொல்லியல் துறையின் நீண்ட முயற்சிக்குப் பின் அதைப் சீரமைக்கும் அனுமதி கிடைத்தது. பல ஆண்டுகளாக நடந்த சீரமைப்புப் பணிகளுக்குப் பின், பிரமீடுகள் இரண்டும் மக்கள் பார்வைக்காகத் தற்போது திறக்கப்பட்டன.

அந்த பிரமிடுக்குள் குறுகிய நீண்ட படிக்கட்டுக்கள், மரத்தாலான கலைப் பொருட்கள், கல்லால் ஆன சவப் பெட்டிகள், மம்மிக்கள் உள்ளிட்டவை காட்சிக்கு அனுமதிக்கப்படுகின்றன. மேலும் இது தஹ்சுர் அரச குடும்பத்தின் கல்லறையாக இருக்கக் கூடும் என்பது அகழாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Share this post with your friends