தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குனரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் திறந்து வைத்தார் அப்போது பொதுமக்களிடம் பேசிய உதயநிதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் ஓர் அழகான வேட்பாளர்.
அவரை உங்கள் தொகுதி உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உங்களது ஆதரவை அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் இது பற்றி கூறுகையில் நாம் அழகு என்று கூறியது சகோதரியின் தமிழ், சமூக சேவை செய்யும் மனம் அதையெல்லாம் என்று கூறினார்.
ஆனால் அதில் அழகான வேட்பாளர் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு இணையதளத்தில் தேவை இல்லாமல் வைரலாக்கி வருகின்றனர் என தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இது போன்ற தவறான விஷயங்களை பரப்பாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .