Mnadu News

நெருப்புடன் விளையாட வேண்டாம் அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவவில்லை என்றால், ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் ஈரான் கூறியிருந்தது.

அதன்படி, 300 கிலோகிராம் என்ற அளவைத் தாண்டி, செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரித்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மேலும் மீறிச்செல்ல வேண்டாம் என பிரிட்டன் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா கொடுத்த நெருக்கடியின் விளைவாகவே, ஒப்பந்தம் சிதையும் நிலை ஏற்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, ஈரானின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் நெருப்புடன் விளையாடுவதாகவும், என்ன செய்கிறோம் என தெரிந்துதான் ஈரான் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More