Mnadu News

அமெரிக்காவில் சீன கேமராக்கள் மூலம் உளவு

அமெரிக்க அரசின் அலுவலகங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் நிறுவப்பட்டுள்ள சீன தயாரிப்பு கண்காணிப்பு கேமராக்களால் உளவு பார்க்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் சீன தயாரிப்பு கண்காணிப்பு கேமராக்களை அகற்ற அமெரிக்க அரசு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக ஸெஜியான் டாஹ்வா டெக்னாலஜி மற்றும் 42 சதவீதம் சீன அரசின் பங்களிப்பில் இயங்கும் ஹங்க்சவ் ஹிக் விசன் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராக்களை அகற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு முன்னதாக கேமராக்களை முழுவதுமாக அகற்றுவது சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது .

Share this post with your friends