இளம் நடிகர் வைபவ் நடிப்பில் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம் வரும் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர ‘காட்டேரி’, ‘சிக்ஸர்’ உள்ளிட்ட படங்களிலும் வைபவ் நடித்துமுடித்துள்ளார்.
தற்போது நிதின் சத்யாவின் ஷ்வேத் குரூப்பின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் அண்மையில் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க, நிதின் சத்யா, வைபவ்வின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் வில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .