Mnadu News

சிதைந்து போன டைட்டானிக் கப்பலின் காட்சிகள்… ஆராய்ச்சியில் ஆழ்கடல் ஆய்வாளர்கள் …

சிதைந்து போன டைட்டானிக் கப்பலின் காட்சிகளை, ஆழ்கடல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு டைட்டானிக் கப்பல் தன் முதல் பயணத்தைத் தொடங்கியது.

எப்போதும் மூழ்காதது என அறிவித்து புறப்பட்ட டைட்டானிக் கப்பல் நான்கே நாட்களில் பனிப்பாறை மீது மோதி, மறுநாள் அதிகாலை கடலில் மூழ்கியது. அதில் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர், பத்திரிகையாளர்கள் ஆகிய பிரபலங்கள் உள்பட 2 ஆயிரத்து 223 பேர் பயணித்த நிலையில் 706 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர்.

Image

1517 பேரின் உயிரைப் பறித்த அந்த கோர விபத்தில் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட்டின் கரையில் இருந்து 400 மைல் தூரத்தில் 12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் 107 ஆண்டுகளுக்குப் பின் தற்போதுள்ள நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், விக்டர் வெஸ்கோவாவின் குழு ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த தோற்றத்தை படம்பிடித்துள்ளது. முப்பரிமாண முறையில் வீடியோ பதிவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து...

Read More