பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன், நடிகர் ரஜினிகாந்தை சமீபத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து அவர் இஸ்லாமிய புனித தலமான அஜ்மீர் தர்ஹாவுக்கும் சென்றுள்ளார். ரஜினிகாந்தை சந்தித்தது அவரது அடுத்த படத்தை இயக்குவதற்காக என்றும், ‘தர்பார்’ படத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்துக்கு பாடல் எழுதுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
விக்னேஷ் சிவன், தான் இயக்க இருக்கும் சிவகார்த்திகேயன் பட கதையை மும்பையில் எழுதி வருவதால் இந்த சந்திப்பு தற்செயலாக நடந்தது என்றும், அவரது அஜ்மீர் தர்ஹா பயணமும் தற்செயலாக நடந்தது என்றும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.