40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ற அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் மிக விமர்சையாகவும், சிறப்பாகவும் நடைபெற்று முடிந்தது .அத்திவரதர் வைபவம் நடைபெற்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசித்தனர் .கட்டுக்கடங்காத பக்க்தர்கள் கூட்டம் இருந்தாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்த துப்புரவு பணியாளர்களுக்கு என்ற ஒரு தனி பாராட்டும்,பெருமையும் உண்டு.
பக்தர்கள் கூட்டம் அலை மோதி வந்தாலும் சிறிது கூட முகம் சுளிக்காமல் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அத்திவரதர் வைபவத்தில் சிரமம் பாராமல் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தான் தலைவணங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் 46 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 196 மருத்துவர்கள் 108 செவிலியர்கள் உள்ளிட்ட 934 பேர் சுழற்சி முறையில் பணிபுரிந்தனர்.இந்நிலையில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அத்திவரதர் வைபவத்தில் ஒரு கோடி பேர் கலந்துகொண்ட நிலையிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார்.இம்மாத இறுதிவரை, காஞ்சிபுரம் நகர் முழுவதும் தொற்றுநோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.