தமிழகத்தில் தற்பொழுது மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது .மருத்துவ படிப்பில் சேர நுழைவு தேர்வான நீட் தேர்வு போன்றவற்றினால் தமிழக மாணவர்க்ளுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டா கனவாக விளங்குகிறது .இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப்படிப்பில் சில முறைகேடு நடைபெறுவதால் வேற்று மாநிலங்களுக்கு சீட் கிடைத்துவிடுகின்றன .
மேலும் மருத்துவ படிப்பில் நடைபெறும் முறைகேடு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ,தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் வேறு மாநிலத்தை சேர்ந்தவருக்கு கிடைக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போலிச் சான்றிதழ்கள் மூலம் தமிழ்நாட்டில் விண்ணப்பித்த 3 ஆயிரத்து 600 பேரை விண்ணப்ப அளவிலேயே நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், போலி சான்றிதழ்கள் மூலம் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்.