நாடாளுமன்ற மற்றும் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது .இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் விஜயகாந்த் எப்பொழுது தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என எதிர்பாத்தவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் வகையில் இன்று சென்னயில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உறுதிப்படுத்தியள்ளார்.
இந்நிலையில் தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் வடசென்னை ,தென் சென்னை மற்றும் மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வர் என குறிப்பிட்டுள்ளனர் .