Mnadu News

விக்ரம் வேதா’ இயக்குனர்களின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இணைத்து இயக்கிய படம் ‘விக்ரம் வேதா’. இந்நிலையில், இவர்களின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து உருவாக்கிய புதிய தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு ‘ஏலே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Share this post with your friends