Mnadu News

சிகிச்சைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த விஷ்ணு விஷால்

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது ‘கும்கி 2’ மற்றும் ‘ஹாதி மெரே சாதி’ என்ற ஹிந்தி படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் – ராணா டகுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின் போது விஷ்ணு விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக இவர் சில காலம் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் “மீண்டும் பிரபு சாலமன் படத்தில் இணைந்திருக்கிறேன். விட்ட இடத்தில் இருந்து படப்பிடிப்பை துவங்கியிருக்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு ‘காடன்’ என்றும், தெலுங்கு பதிப்பிற்கு ஆரண்யா’ என்றும் தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends