Mnadu News

‘சூர்யா 39’ படத்தில் இணையும் ‘விஸ்வாசம்’ குழுவினர்

இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘சூர்யா 39’. இந்த படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘விஸ்வாசம்’ படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் ‘சூர்யா 39’ படத்தில் பணிபுரியவுள்ளனர்.

Share this post with your friends