நீலகிரி மாவட்டத்தில் தற்போது பேரிக்காய் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதனை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பழம் தின்னும் வௌவால் குன்னூரில் முகாமிட்டுள்ளன.குன்னூர் வெல்லிங்டன் அருவங்காடு போன்ற சுற்று வட்டார பகுதிகளில் வால்பேரி,குண்டுபேரி சீசன் தொடங்கியுள்ளது,இந்நிலையில் குன்னூர் அருகே வெல்லிங்டன் ராணுவ முகாமிற்கு செல்லும் பிரதான சாலையை ஒட்டியுள்ள சாலை அருகே ராணுவ முகாம் படகு இல்லம் உள்ளது.
அதனை சுற்றியுள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பழம் தின்னும் வௌவால் கூட்டம் கூட்டமாக சமவெளி பகுதிகளில் இருந்த இங்கு வந்து முகாமிட்டுள்ளது.பகல் நேரங்களில் ஓய்வு எடுத்து இரவு நேரங்களில் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் பேரிக்காய் தோட்டங்களுக்கு சென்று பழங்களை தின்று விட்டு மீண்டும் அதிகாலையில் இந்த வவ்வால்கள் படகு இல்ல மரங்களுக்கு திரும்பி விடும் .இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பேரிக்காய் அறுவடையை வேகமாக துவக்கியுள்ளனர்.