தற்பொழுது தண்ணீர் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ,திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் குடம் இங்கே தண்ணீர் எங்கே என்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் முழக்கமிட்டு ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் எடுத்துள்ளனர்.தமிழக அரசை நோக்கி ஸ்டாலின் அவர்கள் குடம் இங்கே தண்ணீர் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார் .தமிழகத்தில் வேலைவாய்ப்பு ,குடிநீர் ,வேலை வாய்ப்பு ,நிதி போன்றவை தமிழகத்தில் மோசமான நிலை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார் .
மேலும் அவர் கூறுகையில்,அமைச்சர் வேலுமணி அவர்கள் ஊழல்மணி மற்றும் அவர் உள்ளாட்சி துறையில் பணியாற்றவில்லை ,ஊழல் துறையில் தான் பணியாற்றுகிறார் என விமர்சித்து கூறினார்.ஆட்சியை தக்க வைத்து கொள்ள தான் யாகம் நடத்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார் .பின்னர் அவர் கூறுகையில் தேர்தல் நடக்காமலே ஆட்சி மாற்றம் நிகழும் என அவர் உறுதியாக கூறினார் .