நயன்தாராவை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சை பேசிய ராதாரவியை எதிர்த்து பல்வேறு பிரபலங்கள் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்துள்ள நிலையில், நடிகை நயன்தாரா ராதாரவியை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அவர் அதில் தெரிவித்திருப்பது என்னவென்றால் தன்னை பற்றி சர்ச்சை கருத்துக்களை கூறிய ராதாரவியை விசாரிக்க ஒரு தனி குழு நியமிக்க வேண்டும் என்றும் , மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்கு வேண்டும்.திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ராதாரவியை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியதற்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார் நயன்தாரா