Mnadu News

அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

குளிர் காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பிலிருந்தே வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வுமையம்  தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் ,மேலும் இயல்பு வெப்பநிலையை காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் .

தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியுள்ளது .தெற்கிலிருந்து காற்று வீசுவதால் அந்த காற்று நிலப்பரப்பை எட்டாமல் இருப்பதே கடுமையான வெயிலின் தாக்கத்திற்கு காரணம் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மதுரை ,திருத்தணி ,சேலம் ஆகிய இடங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 103 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends