தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, பாப்பாநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமங்கலக் கோட்டை மாதவன் குடிகாட்டைச் சேர்ந்தவர் கனிமொழி இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூரில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த பாப்பநாடு காவல் நிலையத்தில் கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அனைத்து விமான நிலையங்களுக்கு தகவலை காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த கனிமொழி பாப்பநாடு காவல்துறையால் திருச்சி காவல் நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.