Mnadu News

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி தெரியுமா …

2019 சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 3வது வாரத்தில் தான் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 5ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .சிபிஎஸ்இ 10ம்வகுப்பு பொது தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 29ம் தேதி வரை நடைபெற்றது. 27 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வின் முடிவுகளை cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.

Share this post with your friends