Mnadu News

முகநூல் மூலம் எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ் யாருக்கு தெரியுமா ?

தமிழ்த்திரையுலகில் இருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும் மக்கள் மனதில் அவரது நல்ல செயல்களின் மூலம் நிஜவாழக்கையிலும் ஹீரோவாக இருப்பவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ்

இந்நிலையில் அவரது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் , நாம் தமிழர் கட்சியின் சீமானை நேரடியாக குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதில்,உங்கள் தொண்டர்கள் சிலர், எனது சேவை தொடர்பான பதிவுகளில் மிகவும் கீழ்த்தரமாக, கொச்சையாக, அசிங்கமாக பதிவிட்டு வருகின்றனர். இது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. நான் ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சிக்கு போகும் போது கூட, உங்கள் தொண்டர்கள் மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்.

அரசியலில் இதுவரை ஜீரோவாகத் தான் இருக்கிறேன். அதில் ஹீரோவாக்கி என்னை அரசியலில் இழுத்து விட வேண்டாம். இது சமாதானமா சவாலா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More