தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் தூத்துக்குடியில் இரு முக்கிய பெண் தலைவர்கள் நேருக்கு நேருக்கு தேர்தல் தர்பாரில் ஈடுபட உள்ளனர்.
அந்தவகையில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழியும், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் நேருக்கு நேருக்கு மோதுகின்றனர். மக்களவைத் தேர்தல் 40 தொகுதிகளுக்கு நடைபெற்றாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளின் வரிசையில் தூத்துக்குடி தொகுதியாகத் தான் இருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனிடம் தூத்துக்குடி தொகுதியில் தங்களது மகள் தமிழிசையும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் கனிமொழியும் போட்டியிடுகிறார்கள். குமரி ஆனத்தனின் ஆதரவு மகளுக்கா? அல்லது கூட்டணி வேட்பாளருக்கா என்ற தர்மசங்கடமான கேள்வி கேட்கப்பட்டது.
சற்று திகைத்து நின்ற குமரி ஆனந்தன் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் எனவும், யார் ஜெயிப்பார் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என ஒரே பாலில் இரண்டு சிக்சரை அடித்திருக்கிறார்.கனிமொழி வெல்வார் அல்லது தமிழிசை வெல்வார் என நேரிடையாக கருத்து தெரிவிக்காமல் மலுப்பலாக பதிலளித்துள்ளார்.